குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

0 841

குஜராத் மாநிலம் வதோதராவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த, 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

பவமன்புரா பகுதியில் கட்டப்பட்டு வந்த அந்த கட்டிடம் நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments