புரி ஜகன்னாதர் கோயில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா - கோயிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தகவல்

0 862
புரி ஜகன்னாதர் கோயில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா - கோயிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தகவல்

ஒடிசாவில் உள்ள புரி ஜகன்னாதர் ஆலயத்தில் பணியாற்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் கோயிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ஒடிசா அரசு, பூரியில் உள்ள ஜெகன்னாதர் கோயிலின் கருவறையில் போதுமான இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்காக கோயில் திறக்க அனுமதிக்கப்பட்டால் தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கோயில் ஊழியர்கள் 351 பேருக்கும், 51 அதிகாரிகளுக்கும் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments