ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் மார்ச் 25ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

0 958
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் மார்ச் 25ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம், ஜப்பானில் மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கி, 121 நாட்களுக்கு ஜப்பானின் 47 மாகாணங்களிலும் வலம் வரும் என, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments