அக்.1ம் தேதி முதல் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

0 3177

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 8வது கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது அல்லது கூடுதலாக புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இன்று பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார். 

அப்போது, தமிழகத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது மற்றும் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் தியேட்டர்கள், கடைகள் திறக்கும் நேரம், புறநகர் ரயில்கள் இயக்கம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கல்லூரிகள் திறப்பு, நோய்த் தொற்று அதிகமுள்ள 15 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments