சீனாவின் சவாலை எதிர்கொள்ள எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவித்த இந்தியா.!

0 9042

சீனாவின் சவாலை எதிர்கொள்ள அதிநவீன சூப்பர்சானிக் ஏவுகணையான பிரமோஸ், சப்சானிக் ஏவுகணையான நிர்பய் மற்றும் போர் விமானம் உள்ளிட்ட வான் இலக்கை 40 கிலோ மீட்டர் தூரத்திலேயே தாக்கி அழிக்கும் ஆகாஸ் ஏவுகணைகளை தயார் நிலையில் இந்தியா வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவும் நிலையில், சின்சியாங், திபெத்தில் இந்திய பகுதிகளை குறிவைத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூர ஏவுகணை, நீண்ட தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை சீனா நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து சென்று 500 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தாக்கும் பிரமோஸ், 800 கிலோ மீட்டர் தாக்குதல் நடத்தும் நிர்பய் ஏவுகணையை தயார் நிலையில் இந்தியா வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சுகோய் போர் விமானங்களில் அதிக எண்ணிக்கையில் பிரமோஸ் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அத்தகவல் கூறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments