டெல்லி விமான நிலைய 2 ஆம் முனையத்தில் அக்டோபர் 1 முதல் விமானங்களின் இயக்கம் தொடங்குவதாக அறிவிப்பு

டெல்லி விமான நிலைய 2 ஆம் முனையத்தில் அக்டோபர் 1 முதல் விமானங்களின் இயக்கம் தொடங்குவதாக அறிவிப்பு
டெல்லி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அக்டோபர் ஒன்று முதல் விமானங்களின் இயக்கம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் மார்ச் 25 முதல் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மே மாதத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது முனையத்தில் 6 மாதங்களுக்குப் பின் வியாழனன்று 48 விமானங்கள் தரையிறங்கவும், 48 விமானங்கள் புறப்படவும் உள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட 20 நகரங்களுக்கும், ஒருவாரத்துக்குப் பின் மதுரை உள்ளிட்ட மேலும் 12 நகரங்களுக்கும் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Comments