விகாஸ் துபே பாணியில் உ.பி.யில் மேலும் ஒரு தாதா கார் விபத்தில் உயிரிழப்பு

0 2633

லக்னோ தாதா விகாஸ் துபே கார் விபத்தில் சிக்கி பின்னர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதே பாணியில் உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு தாதா, விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரோஸ் அலி என்ற இந்த தாதா மும்பையில் பிடிக்கப்பட்டு, லக்னோவுக்கு போலீசாரால் கொண்டுவரும் போது மத்திய பிரதேச தலைநகர் போபாலுக்கு 214 கிலோ மீட்டர் வடக்கே குணா மாவட்டத்தில் வைத்து கார் விபத்துக்குள்ளானது.

பசு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்ததால், கார் கட்டுப்பாட்டு இழந்து கவிழ்ந்த தாக ஓட்டுநர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் உதவி துணை ஆய்வாளர், ஒரு காவலர் , ஒட்டுநர் மற்றும் தாதா பெரோஸ் அலியின் உறவினர் என 4 பேர் காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments