டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பத்தின் 18.4 சதவீத பங்குகளை வாங்க டாட்டா குழுமம் முடிவு!

0 1369
டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பத்தின் 18.4% பங்குகளை வாங்க டாட்டா குழுமம் முடிவு!

டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பத்துக்கு உள்ள பங்குகளை விலைக்கு வாங்க நிதி திரட்ட, முதலீட்டாளர்களிடம் டாட்டா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மிஸ்திரி குடும்பத்தின் சபூர்ஜி பலோஞ்சி குழுமத்துக்குப் பத்தாயிரத்து 900 கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில் அதனிடம் உள்ள டாட்டா சன்ஸ் பங்குகளை அடகு வைக்க முடிவு செய்துள்ளது.

இதற்குத் தடை விதிக்கத் கோரி உச்சநீதிமன்றத்தில் டாட்டா சன்ஸ் வழக்கு தொடுத்தது. விசாரணையின்போது டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பத்துக்கு உள்ள 18 புள்ளி 4 விழுக்காடு பங்குகளைச் சந்தை விலைக்கு வாங்கிக் கொள்வதாக டாட்டா குழுமம் தெரிவித்தது.

இந்தப் பங்குகளின் விலை ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதால் அதை வாங்குவதற்கான முதலீட்டைத் திரட்ட ஐரோப்பிய முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் டாட்டா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments