மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் கோரிக்கை

0 1459
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பி., 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதை அந்த கடிதத்தில் ஜெகன் சுட்டிக்காட்டி இருக்கிறார். இசைத்துறையில் புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர், எம்எஸ் சுப்புலட்சுமி, பூபேன் அசாரிகா, பிஸ்மில்லா கான் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இசைத்துறைக்கு 50 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ள எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments