கொரோனாவை காரணம் காட்டி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தள்ளிவைக்க முடியாது - யுபிஎஸ்சி

0 848
கொரோனாவை காரணம் காட்டி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தள்ளிவைக்க முடியாது - யுபிஎஸ்சி

கொரோனாவை காரணம் காட்டி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தள்ளிவைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 31 ஆம் தேதி நடக்க வேண்டிய சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வுகள், கொரோனா காரணமாக வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் தேர்வை 2 அல்லது 3 மாதம் தள்ளிவைக்க கோரி 20 பேர் கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயதனர்.

மனு மீதான விசாரணையின் போது, தேர்வுகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என்று யுபிஎஸ்சி சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments