வங்கிக்கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரிய மனு : விசாரணை ஒத்திவைப்பு !

0 1397
வங்கிக்கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரிய மனு : விசாரணை ஒத்திவைப்பு !

கொரோனா காலத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்த அளிக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரியும், இக்காலத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசத்தை நீட்டிக்கக்கோரி, 2 பேர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்ட ஆவணங்களை சமர்பிக்க கூடுதல் அவகாசம் தேவை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைகேட்ட உச்சநீதிமன்றம், அந்த ஆவணங்களை தாக்கல் செய்ய வசதியாக விசாரணையை ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments