திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்

0 488
திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்

சட்டப்பேரவைக்குள் 2017 ஆம் ஆண்டு குட்கா எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், உரிமைக்குழு சட்டபேரவையில் ஒரு அங்கம் என்பதால், அதன் நடைமுறைகளுக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளது எனவும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றம் தலையிட அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments