வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

0 1112
வேளாண்மைத்துறை தொடர்பாக இன்றியமையாப் பொருட்கள் சட்டத் திருத்தம் உள்ளிட்ட மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

புதிய வேளாண்துறைச் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப், டெல்லி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி இந்தியா கேட் அருகே பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஒரு டிராக்டரை லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்டுத் தீவைத்துக் கொளுத்தினர்

வேளாண்மைத்துறை தொடர்பாக இன்றியமையாப் பொருட்கள் சட்டத் திருத்தம் உள்ளிட்ட மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பும், வேளாண்மையைப் பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழலும் ஏற்படும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் மத்திய அரசைக் கண்டித்து விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி இந்தியா கேட் அருகே பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஒரு டிராக்டரை லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்டுத் தீவைத்துக் கொளுத்தினர். போராட்டக்காரர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை இயற்றிய மத்திய அரசைக் கண்டித்துப் பகத்சிங் நகரில் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேளாண்துறைச் சட்டங்கள், நிலச்சீர்திருத்த அவசரச் சட்டம் ஆகியவற்றைக் கண்டித்துக் கர்நாடகத்தில்  ஹசனில் அனைத்திந்திய உழவர் சங்கத்தின் சார்பில் ஹேமாவதி சிலை முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹூப்ளியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கடைகளை அடைக்கும்படி வணிகர்களுக்குப் பூக்களைக் கொடுத்து விவசாய சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.  அதன்பின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பெங்களூர் டவுன் ஹால் முன்பு விவசாய சங்கத்தினர் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளின் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி அதைக் கண்டித்து முழக்கமிட்டனர். 

சிவமோகாவில் விவசாய சங்கங்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவற்றின் தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்துப் போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments