அடிப்படைவாத அமைப்பினர் அச்சுறுத்தலால் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிப்பு - உளவுத்துறை எச்சரிக்கை

0 3195
அடிப்படைவாத அமைப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, தமிழக முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைவாத அமைப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, தமிழக முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கு அடிப்படைவாத அமைப்பினர் மற்றும் சமூக விரோத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு, உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை காவல்துறையினர் அதிகரித்துள்ளனர். முதலமைச்சருக்கு z பிளஸ் பாதுகாப்பு, எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு மற்றும் சென்னை காவல்துறை ஆகியவை மூலம் வீடு, அலுவலகம் மற்றும் கான்வாய்களில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், புதிதாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீவிரவாத கும்பல்களால் இந்து அமைப்பு தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலை அடுத்து அனைத்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments