பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர் மீது சராமரி தாக்கு... ஃபேஸ்புக்கிலும் லைவ்!

0 13387

பெண்களை ஆபாசமாக விமர்சித்தவருக்கு சராமரி அடி உதை... ஃபேஸ்புக்கிலும் லைவ் வீடியோ வெளியீடு

பெண்களை ஆபாசமாக சித்தரித்து யூடியுப்பில் வீடியோ வெளியிட்ட யுடியூப் சேனல் நிர்வாகியை மீது சினிமா டப்பிங் கலைஞர் பாக்கிய லக்ஷ்மி உள்ளிட்ட மூன்று பெண்கள் சராமரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

திருவனந்த ‘புரத்தை சேர்ந்தவர் விஜய் நாயர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மற்றும் தன் யூடியுப் சேனலில் இந்தியாவில் செயல்பட்டுவரும் பெண் செயற்பாட்டாளர்கள், குறிப்பாக கேரள பெண் செயற்பாட்டாளர்கள் குறித்து கீழ்த்தரமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் .சமீபத்தில், சினிமா டப்பிங் கலைஞர் பாக்கிலஷ்மியையும் அசிங்கமாக விமர்சித்து வீடியோ ஒற்றை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக போலீஸ்துறை, கேரள பெண்கள் அமைப்பு, சைபர் செல் போன்றவற்றில் புகாரளித்தும் விஜய் நாயர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பெண் செயற்பாட்டாளர்கள் தாங்களே விஜய் நாயருக்கு புத்தி புகட்ட முடிவு செய்தனர்.

இதையடுத்து, தம்பானுர் பகுதியிலுள்ள விஜய் நாயர் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பாக்யலக்ஷிமி மற்றும் பெண் ‘செயற்பாட்டாளர்கள் தியா, ஸ்ரீலட்சுமி உள்ளிட்டோர் சென்றனர். பின்னர், வீட்டிலிருந்த விஜய் நாயரை சராமரியாக தாக்கியதோடு, முகத்தில் கரியும் பூசினர்.

மேலும், நீ அப்லோட் செய்த வீடியோக்களை அழிக்க வேண்டும், பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியும் விஜய் நாயரை அடித்து துவம்சம் செய்தனர். விஜய் நாயரை தாக்கும் காட்சிகளை ஃபேஸ்புக்கிலும் லைவ் செய்தனர்.தற்போது ,அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த சம்பவம் குறித்து விஜய் நாயர் அளித்த புகாரின் பேரில் பாக்யலக்ஷ்மி உள்ளிட்டோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டப்பிங் கலைஞர் பாக்யலக்ஷிமி கூறுகையில் , விஜய் நாயர் மீது பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நாங்களே சட்டத்தை கையில் எடுத்தோம் '' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments