போதைப் பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் ஜாமீன் மனுக்கள் மீது சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

0 1378
போதைப் பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் ராகிணி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது பெங்களூரு போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

போதைப் பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் ராகிணி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது பெங்களூரு போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று  தீர்ப்பளிக்கிறது.

போலீஸ் காவலில்  விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் இருவரும், தொழிலதிபர் ராகுலும், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதே வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிவபிரகாஷும், கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம்  முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments