அக்டோபர் மாதத்துக்கான ரேசன் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்

0 2256
அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது.

அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது. 

ரேஷன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான்  கூறியுள்ளார்.

அதன்படி, பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் இன்று முதல் 30-ந்தேதி வரை, வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டைதாரர்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் மட்டும் பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றும் மற்ற நேரத்தில் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments