லடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

0 1524

லடாக்கை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனையை அடுத்து உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது.

லடாக்கில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் அதனை புறக்கணிப்பதாக அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து  லடாக்கை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில்  ஆலோசனை நடத்தினார்.

லடாக் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் துப்ஸ்டன் செவாங், தீட்சே ரின்போசே மற்றும் முன்னாள் அமைச்சர் செரிங் டோர்ஜய் லக்ரூக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெறுவதாக மக்கள் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments