திருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கான பந்தக்கால் நடும் வைபவம்-பக்தர்களுக்கு அனுமதி இல்லை

0 15886

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் வருகிற 28-ந் தேதி பந்தகால் நடும் முகூர்த்த விழா நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 29-ந் தேதியன்று நடைபெற உள்ளது.

தீபத்திருவிழாவினை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் பந்தகால் முகூர்த்த விழாவில் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதே போல தீபத்திருவிழாவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நடக்குமென  கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments