ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்தரவாத இயக்குனரகத்திடம் ஒப்படைப்பு

0 3861

ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா ராக்கெட், தர உத்தரவாத இயக்குனரகத்திடம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வுக்கூடம் பினாகா ராக்கெட் அமைப்பை வடிவமைத்து உருவாக்கி உள்ளன.

இந்த ராக்கெட் அமைப்பு முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன், ஒரே நேரத்தில், 44 வினாடிகளில் 12 ராக்கெட்டுகளை ஏவி, வெவ்வேறு இலக்கு களை மிகத்துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

அதிகபட்சம் 37.5 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை இவை தாக்கி அழிக்கும். இந்த நிலையில், பினாகா ராக்கெட் அமைப்பை பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் வரும் தர உத்தரவாத இயக்குனரகத்திடம், புனேயில் நடந்த நிகழ்ச்சியின்போது டி.ஆர்.டி.ஓ. ஒப்படைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments