அசாம் கனமழையால் 5 மாவட்டங்களில் 1.79 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிப்பு

0 792
அசாம் கனமழையால் 5 மாவட்டங்களில் 1.79 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிப்பு

அசாமில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் தென்மேற்குப் பருவமழையால் மூன்றாம் கட்டமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாகான் மாவட்டத்தில் கொப்பிலி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

ஆற்றங்கரையோரத்தில் உள்ள 155 ஊர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 5 மாவட்டங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments