14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

0 5732
14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய லேசான மழையும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செப்டம்பர் 29-ம் தேதி மேற்கண்ட கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments