காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தது இந்திய ராணுவம்

0 1799
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லை வழியே இந்தியாவுக்குள் 5 பயங்கரவாதிகள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லை வழியே இந்தியாவுக்குள் 5 பயங்கரவாதிகள்  ஊடுருவ மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.

சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களுடன் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கிச் சண்டை மூண்டது.

பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இந்திய வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 5 பேரும் பாகிஸ்தான் பகுதிக்குள் திரும்பி விட்டனர். கடந்த 14ம் தேதி  நடைபெற்ற ஊடுருவல் முயற்சியையும் இந்தியா முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments