மெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்ட வழக்கு - 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி போராட்டங்கள்

மெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்ட வழக்கு - 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி போராட்டங்கள்
மெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குரேரோ மாநிலத்தில் உள்ள அயோட்ஜினாபா ஆசிரியர் கல்லூரியில் இருந்து 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.
இந்த நிலையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்களுக்கு முதன்முறையாக நேற்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், முக்கிய வீதிகளில் போராட்டம் நடந்தது.
Comments