இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர்ப் பயிற்சி

0 1243

வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய - ஜப்பானிய கடற்படையினரின் கூட்டுப் போர் ஒத்திகை வடக்கு அரபிக் கடற்பகுதியில் நேற்றுத் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் இரு நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந்தாங்கிக் கப்பல்கள், ரோந்துக் கப்பல்கள் ஆகியன ஈடுபட்டுள்ளனர்.

எதிரி நாட்டுக் கப்பலைச் சுற்றி வளைத்தல், விரைந்து முன்னேறுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இருநாட்டுக் கடற்படையினரும் செய்து காட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments