பசுமை வீடு திட்டத்தில் சோலார் பேனல் பொருத்த வருவோருக்கு பணமோ, பொருளோ தர தேவையில்லை - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

0 1115
பசுமை வீடு திட்டத்தில் சோலார் பேனல் பொருத்த வருவோருக்கு பணமோ, பொருளோ தர தேவையில்லை - ஆட்சியர்

பசுமை வீடு திட்ட பயனாளிகள் சோலார் பேனல் மற்றும் விளக்குகள் பொருத்த வருவோருக்கு பணம் வழங்க தேவையில்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு, சோலார் பேனல் மற்றும் விளக்குகள் பெருத்துவதற்கான ஒப்பந்தம் ஈரோட்டை சேர்ந்த பூவேந்திரகுமார் என்பவருக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு சோலார் பேனல் பொருத்த வருவோர், வீட்டு உரிமையாளர்களிடம் கட்டாயப்படுத்தி 1000 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பசுமை வீடு திட்ட பயனாளிகள் யாரும், சோலார் பேனல் பொருத்த வருவோருக்கு பணமோ, பொருளோ வழங்க தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments