மதுபானத் தயாரிப்பு ஆலையில் தரையில் கொட்டி வீணான 50,000 லிட்டர் சிவப்பு ஒயின்

0 5905
மதுபானத் தயாரிப்பு ஆலையில் தரையில் கொட்டி வீணான 50,000 லிட்டர் சிவப்பு ஒயின்

ஸ்பெயின் நாட்டில் மதுபானத் தயாரிப்புக் கூடத்தில் உள்ள கொள்கலனில் ஏற்பட்ட ஓட்டையால் 50 ஆயிரம் லிட்டர் சிவப்பு ஒயின் ஆறாக ஓடி வீணானது.

வில்லமாலியா என்ற இடத்தில் மதுபானத் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு மிகப் பெரிய கொள்கலன்களில் மதுவகைகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

அப்போது, சிவப்பு ஒயின் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் திடீரென ஏற்பட்ட ஓட்டையால் அதில் இருந்த ஒயின் கீழே கொட்டியது. செந்நிறச் சுனாமி போல பிரவாகம் எடுத்த சிவப்பு ஒயின், அருகில் இருந்த வயலுக்குச் சென்று வீணானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments