ஹைதராபாத்தில் காதல் திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார் உள்பட 12பேர் கைது

0 7275
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மகளைக் காதல் திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார் உள்பட 12பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மகளைக் காதல் திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார் உள்பட 12பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹேமந்த், அவந்தி என்பவரை 8 ஆண்டுகளாகக் காதலித்த நிலையில் இருவீட்டார் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவந்தியின் உறவினர்கள் அவரது பெற்றோருடன் சேர்த்து வைப்பதாகக் கூறி காரில் அழைத்து சென்றனர்.

அவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்து தம்பதியினர் காரிலிருந்து தப்ப முயன்றபோது அவந்தியை விட்டுவிட்டு ஹேமந்தை கடத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரில் போலீஸார் தேடிய நிலையில் ஹேமந்த் கை கால் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

விசாரணை நடத்திய போலீஸார் முதற்கட்டமாக அவந்தியின் தந்தை லட்சுமண ரெட்டி, உறவினர்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments