சொத்துக்களைப் பட்டியலிட்ட அனில் அம்பானி : நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாக தகவல்

0 3063
பிரிட்டன் நீதிமன்றத்தில் தனது சொத்து விவரங்களைப் பட்டியலிட்டுள்ள அனில் அம்பானி, நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நீதிமன்றத்தில் தனது சொத்து விவரங்களைப் பட்டியலிட்டுள்ள அனில் அம்பானி, நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த உத்தரவிடக் கோரிச் சீனாவின் மூன்று வங்கிகள் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இந்த வழக்கில் ஐயாயிரத்து 281 கோடி ரூபாயை அனில் அம்பானி திருப்பிச் செலுத்தவும், அவரின் சொத்து விவரங்களைத் தெரிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் காணொலியில் ஆஜரான அனில் அம்பானி, தாயிடம் 500 கோடி ரூபாயும், மகனிடம் 310 கோடி ரூபாயும் கடன்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது குடும்ப அறக்கட்டளை உட்பட எந்த அறக்கட்டளையிலும் இருந்து எந்த ஆதாயமும் தனக்கு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், ஒரே ஒரு கார் வைத்துள்ளதாகவும், தனது நகைகளை 9 கோடியே 90 லட்ச ரூபாய்க்கு விற்று வழக்குக்குச் செலவிடுவதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments