நாளை கூடுகிறது அதிமுக செயற்குழு

0 1730
சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக செயற்குழு சென் னையில் நாளை கூடுகிறது.

ராயப்பேட்டை - அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை 10 மணிக்கு துவங்கும் கூட்டத்தில் சுமார் 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அதி முக தலைமை அலுவலகத்தில் 3 பகுதிகளில் இருக் கை வசதிகள் செய்யப் பட்டு உள்ளன.

முதல் தளத்தில் தலைவர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நடை பெறும் நிகழ்ச்சிகளை, வேறு இரு இடங்களில் அமர்ந்திருக்கும் செயற்குழு உறுப்பினர்கள் காணும் வகையில், எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் நிலவரம், வரவிருக்கும் சட்டப்பேரவை த்தேர்தல், கட்சி வளர்ச்சிப்பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து செயற்குழு கூட்டத் தில் விவாதிக்கப்படுமென அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments