காஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது

0 903
காஷ்மீரில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா என்ற இடத்தில் தீவிரவாதி ஒருவன் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராஷ்ட்ரீய ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அதே பகுதியில் கிராமம் ஒன்றில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அவனிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments