ஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும்..? கொரோனா தடுப்பில் ஐ.நா.என்ன செய்தது..? பிரதமர் மோடி சரமாரி கேள்வி...

0 5115
கொரோனா பரவலைத் தடுக்க, ஐ.நா அவை என்ன செய்தது என்றும், ஐ.நாவின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க, ஐ.நா அவை என்ன செய்தது என்றும், ஐ.நாவின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார். 

ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்திர கூட்டத்தில், காணொலி முறை வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்பை, காலத்திற்கேற்ற வகையில், மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா வளர்ந்தாலும், யாரையும் அச்சுறுத்தாத நாடாகவும், சற்று பலவீனமடைந்தாலும், யாருக்கும் பாரமாக இல்லாத நாடாகவும் உள்ளபோது, ஐ.நா சபையில், நிர்வாக ரீதியிலான முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க குழுவில், இந்தியாவை இடம்பெறச் செய்வதில், அப்படியென்ன தயக்கம் இருக்கிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடி, அதிரடியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கொரோனா போன்ற பெருந்தொற்று பேரிடர் காலத்திலும் கூட, 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, அத்தியாவசிய மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை, இந்தியா அனுப்பியிருப்பதாக, பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உலகளவில், தடுப்பூசி உற்பத்தியில், இந்தியா முதன்மையான இடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றிப்பெற்றால், அதனை தயாரித்து, அனைத்து நாடுகளுக்கு இந்தியா தடையின்றி வழங்கும் என உளப்பூர்வமாக உறுதியளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், பண மோசடி போன்ற, மனித நேயத்திற்கு எதிரான, மனித இனம் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிராக செயல்படும் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப, இந்தியா ஒருபோதும் தயங்காது என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments