ஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு

0 3152

ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் சுங்க கட்டணத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 10 சதவீதம் அளவுக்கு சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டண உயர்வு 2022 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒருமுறை பயணிக்க ஆட்டோக்களுக்கு 10 ரூபாயும், கார்களுக்கு 30 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு 78 ரூபாயும், சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments