இந்தியா-இஸ்ரேல்., ஒன்றிணைந்து அதிரடி.! எதிரிகளின் வியூகம் தூள், தூள்.!

0 27649
இந்தியாவும், இஸ்ரேலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை, ஒன்றாக இணைந்து தயாரிக்க, "துணை செயற்பாட்டுக் குழு" ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவும், இஸ்ரேலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை, ஒன்றாக இணைந்து தயாரிக்க, "துணை செயற்பாட்டுக் குழு" ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

எல்லையில், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அத்துமீறல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் ஆகியவற்றை முற்றாக முறியடிப்பதோடு, இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு, இந்திய வான் பரப்பு பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான, "சிறுத்தை திட்டம்" (`Project Cheetah’) என்ற தலைப்பில், ஏவுகணைகள், ஆளில்லா தாக்குதல் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்கள் கொள்வனவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, பரஸ்பரம் தங்களுக்குத் தேவையான மிக முக்கிய ஆயுத தளவாடங்களை தாங்களே தயாரிப்பது, அதை மேம்படுத்துவது என முடிவு செய்திருக்கின்றன. இதற்காக, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செயலர், இஸ்ரேல் ராணுவ அமைச்சக செயலர் ஆகியோர் தலைமையில், SWG என்ற பெயரில், "துணை செயற்பாட்டுக் குழு", அண்மையில், இருநாடுகளின் ஒப்புதலோடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொழில்நுட்ப தளவாடங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், லேசர் நுட்பத்தில் இயங்கும் புதிய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை, இணைந்து தயாரிப்பது, அவற்றை கண்டறிவது, மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை, இந்த துணை பணிக்குழு மேற்கொள்ளும். 

இந்திய கப்பற்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட, பாரக் வகை ஏவுகணைகள், இந்திய ராணுவத்திலும், பயன்படுத்தும் வகையில், "பாரக்-8"(Barak-8) ஏவுகணை என்ற பெயரில், தற்போது, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள், இரவு-பகல் என எந்த நேரத்திலும், எதிரிகளின் ஏவுகணை பறந்து வரும் திசை, அதன் வேகத்திற்கு ஏற்ப, தன்னைத் தானே, தகவமைத்துக் கொண்டு, துல்லிய தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டவையாகும்.

இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான IAI மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு தயாரிப்பு நிறுவனமான ரபேல், எல்பிட், எல்டா சிஸ்டம்ஸ் ஆகியவற்றுடன், DRDO, கல்யாணி குரூப் உள்ளிட்ட இந்திய ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இதுமட்டுமின்றி, லேசர் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு குண்டுவீச வல்ல ஹெரான் ஆளில்லா விமானங்கள், ஹாரூப் டிரோன்கள், பாரக் ஏவுகணை தடுப்பு அமைப்புகள், ஏற்கனவே, இந்திய ராணுவத்தில், தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றன.

காஷ்மீரில் புல்வாமாவில், தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளின் தங்குமிடங்களை, பாகிஸ்தானின் நாட்டின் பாலக்கோட் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப் படைவிமானங்கள் குண்டுவீசி அழித்தொழித்தன.

அப்போது, இந்திய விமானப்படை பயன்படுத்திய, அதிநவீன அடிப்படையில் துல்லிய தாக்குதலுக்கு உதவும், ஸ்பைஸ்-2000 என்ற குண்டுகளைத் தான். இந்த ஸ்பைஸ்-2000 ரக வெடிகுண்டுகள், இஸ்ரேல் நாட்டின் ரபேல் நிறுவன தயாரிப்பாகும். இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட மூன்று நாடுகளிடம் மட்டுமே, இந்த ஸ்பைஸ்-2000 ரக குண்டுகள் இருப்பது, குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments