ஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் ?

0 1560
ஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் ?

ஜம்மு-காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கும் முன்பு ஆயுதங்களுடன் அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும்படி பாகிஸ்தானுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில், மத்திய அரசுக்கு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை அனுப்பியிருப்பதாகவும், அதில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ  அமைப்புக்கு சீனா பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

சீன தயாரிப்பு ஆயுதங்கள் அதிகம் கைப்பற்றபட்டு வருவதும் அந்தத் தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.   புலனாய்வு அமைப்புகளின் எச்சரிக்கையை அடுத்து, எல்லையில் கண்காணிப்பை பாதுகாப்புப் படைகள் அதிகரித்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments