வெடிகுண்டு வீசி, கழுத்தறுத்து... இரண்டு பெண்கள் கொடூரக் கொலை..!

0 4209
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் பழிக்குப்பழியாக வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் பழிக்குப்பழியாக வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நம்பிராஜனும் வான்மதியும் கடந்த ஆண்டு இருவீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு நெல்லை டவுன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

15 நாட்கள் கடந்த நிலையில் நம்பிராஜனை வான்மதியின் உறவினர்கள் வெட்டிக் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றனர். அதற்குப் பழிவாங்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்களான சுரேஷ், ஆறுமுகம் ஆகிய இருவரை நம்பிராஜன் தரப்பு கொலை செய்தது. இந்தப் பழிவாங்கல் படலத்தின் தொடர்ச்சியாக இன்று நம்பிராஜன் வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டை வீசியது.

இதில் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், சகோதரி சாந்தி, சாந்தியின் 3 வயது பெண் குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆத்திரம் தீராத கும்பல், சண்முகத்தாய், சாந்தி இருவரது கழுத்தையும் கொடூரமாக அறுத்துக் கொன்றது. இதில் சாந்தியின் தலை துண்டானது. காயமடைந்த 3 வயது பெண் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்து வான்மதியின் சகோதரன் உட்பட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments