திருமணத்துக்கு 230 பவுன் சீமந்தத்துக்கு 45 பவுன் நகை... ஆனாலும், வரதட்சணை கொடுமையால் பெண் கொலை?

0 48683

சிவகாசியில் வரதட்சணை கேட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரது மகள் கவிநிலா. சிவகாசியில் பிரபல பேக்கரி கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் மகன் துளசி ராமுக்கும் கவிதாவுக்கும் கடந்த 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது கவிநிலாவின் பெற்றோர் 230 சவரன் நகை வழங்கியுள்ளனர்.  சீமந்தம் சமயத்தில் 45 சவரன் நகையும் கூடுதலாக கொடுத்துள்ளனர். 

துளசிராம்- கவி நிலா தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளன. இதற்கிடையே , துளசிராம் மனைவி கவிநிலாவிடத்தில் இன்னும் அதிகமாக வரதட்சணை வேண்டுமென்று கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன் கவி நிலா பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மகளை சமாதானப்படுத்திய பெற்றோர் கவிநிலாவை கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர். அப்போது,  வரதட்சணையாக மேலும் 45 லட்சம் பவுன் தருவதாக உறுதி கூறியுள்ளனர். 

இந்நிலையில், கடந்த  செப்டம்பர் 22-ம் தேதி கவி நிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போன் மூலம் பெற்றோருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.  பதறி போன கவிநிலாவின் பெற்றோர் சிவகாசி சென்று பார்த்தபோது மற்றோரு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் கவி நிலாவின் உடல் வைக்கப்பட்டிருந்துள்ளது.

தன் மகள் இறப்பு  குறித்து  கவிநிலாவின் தந்தை ஆறுமகச்சாமி கூறுகையில், ''என் மகள்  தூக்கிட்டு இறந்ததற்கான எந்தவித தடயமும் இல்லை. அவரின் கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான காயமும் இல்லை. என் மகளின் உடல் காரில் வைக்கப்பட்டது  எதற்காக என்பன போன்ற பல சந்தேகங்கள் உள்ளன. வரதட்சணை கேட்டு கொடுமை செய்து என் மகளை கொலை செய்திருக்கலாம்'' என்று குற்றம் சாட்டியுள்ளார். 

சிவகாசி காவல் துறையினர் கவிநிலாவின் மரணத்தை சந்தேக இறப்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments