பயங்கரவாதம் மற்றும் ரகசிய அணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை... இம்ரான் கானுக்கு  இந்தியா பதிலடி

0 3439
பயங்கரவாதம் மற்றும் ரகசிய அணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால பெருமைமிகு சாதனை... இம்ரான் கானுக்கு  இந்தியா பதிலடி

பயங்கரவாதம் மற்றும் ரகசிய அணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால பெருமைமிகு சாதனை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு  இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் காணொலி மூலம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா மீது ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அணுஆயுத சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்த இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாதத்தை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்று வர்ணித்து அதற்கு பாகிஸ்தான் எப்போதும் உறுதுணையாக இருக்கும், ஆதரவு அளிக்கும் என்றார்.

 

இம்ரான் கான் பேச்சைத் தொடங்கியபோது வெளிநடப்பு செய்த ஐநாவுக்கான இந்திய தூதரக முதல் செயலாளர் (First Secretary in the Permanent Mission of India) மிஜிதோ வினிதோ, பின்னர் ரைட் ஆப் ரிப்ளே (Right of Reply) சிறப்புரிமை அடிப்படையில் பேசினார். அப்போது அவர், சாதனைகள், யோசனைகளை உலகுக்கு தெரிவிக்க பாகிஸ்தானிடம் எதுவும் இல்லாததால் இடைவிடாத ஆத்திரத்துடன் , விஷத்தை இம்ரான் கக்கியிருப்பதாக கூறினார்.

சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டோருக்கு அரசு நிதியிலிருந்து பாகிஸ்தான் ஓய்வூதியம் அளித்து உதவி வருவதாகவும், 40 ஆயிரம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிப்பதாக முன்பு அமெரிக்காவில் பேசிய நிகழ்ச்சியில் இம்ரானே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments