72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்

0 6059
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாடும் நிலா, பாட்டுத் தலைவன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம், கொரோனா பாதித்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து நேற்று மதியம் சரியாக 1 மணி 4 நிமிடத்தில் காலமானார்.

இதைத் தொடர்ந்து, எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் வந்தபடியே இருந்ததால், தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்து சென்று அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருடைய உடல் தாமரைபாக்கத்துக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

இதன்பிறகு தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பிரபல நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய மகன் எஸ்பி சரனுக்கு விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments