உக்ரைனில் ராணுவ விமானம் திடீர் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 25ஆக உயர்வு

0 2147
உக்ரைனில் ராணுவ விமானம் திடீர் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 25ஆக உயர்வு

உக்ரைனில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.

ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின்போது விமானத்தை தரையிறக்க முயன்றபோது திடீரென விபத்தில் சிக்கியது.

இதில் 25 பேர் பலியான நிலையில், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானபோது சிலர் அதிலிருந்து வெளியே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

விமானத்திலுள்ள இரட்டை என்ஜின்களில் ஒரு என்ஜின் கோளாறானதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments