கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

0 1937
கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பில் ஒரு நாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரத்து 468 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதேபோல் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 93 பேர் பெருந்தொற்றினால் மரணமடைந்ததைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 48 லட்சத்து 46 ஆயிரத்து 168 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், 9 லட்சத்து 62 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments