இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இறுதிக்கட்ட பரிசோதனை.... மனிதர்களுக்கு விரைவில் பரிசோதிக்க நடவடிக்கை

0 1730
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இறுதிக்கட்ட பரிசோதனை.... மனிதர்களுக்கு விரைவில் பரிசோதிக்க நடவடிக்கை

கொரோனாவுக்கு இந்தியாவில் மேலும் மூன்று மருந்துகள் மூன்றாம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகின்றன.

ஜெனோவா பயோஃபார்மடிகல்ஸ், பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பையோடெக் ஆகிய நிறுவனங்களினால் தயாராகும் இந்த மூன்று மருந்துகளும் தங்கள் ஆய்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

விரைவில் மனிதர்களுக்கு இந்த மருந்துகள் பரிசோதிக்கப்படும் என்று இந்தியாவில் மருந்து தயாரிப்பை ஒருங்கிணைக்கும் உயிரி தொழில்நுட்பத்துறையின் தலைவர் டாக்டர் ரேணுகா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 150 மருந்துகள் பரிசோதிக்கப்படும் நிலையில் 38 வகை மருந்துகள் மனிதர்களிடம் பரிசோதிக்கும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளன. ரஷ்யா ஏற்கனவே ஸ்புட்னிக் வி என்ற மருந்தை மனிதர்களிடம் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments