கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடி பேர் பயணம் - மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி

0 835
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடி பேர் பயணம்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடி பேர் பயணம் செய்துள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், கடந்த மே மாதம் 25ந் தேதி முதல் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடி பேர் பயணித்துள்ளனர் என்றார்.  மொத்தம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 210 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பிருந்த நிலையைப் போலவே வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் விமானப் பயணம் செய்யத் துவங்கி உள்ளனர் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments