மௌனமான ராகத்திற்கு வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..

0 4785
மௌனமான ராகத்திற்கு மக்கள் அஞ்சலி..

காற்றில் கலந்த கானக்குயில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பி. வீட்டில் இருந்து அவரது உடல், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு நேற்று மாலை வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. கோயம்பேடு அருகே திரளான ரசிகர்களும், பொதுமக்களும் மலர் தூவி எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.பி.பி. உடலை ஏற்றிச் சென்ற வேனை ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர். மாதவரம், மூலக்கடை, செங்குன்றம் என ஆங்காங்கே மறித்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து மறைந்த இசைக்கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.

புழல், செங்குன்றம் ஆகிய இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள், மொபைல் போன்களில் டார்ச் அடித்து அஞ்சலியைக் காணக்கையாக்கினர்.

எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகரான பார்த்திபன் என்பவர் நாதஸ்வரம் இசைத்து இசையஞ்சலி செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments