ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

0 3304
ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 64 ரன்களை குவிக்க, ஷிகர் தவான் 35 ரன்களை சேர்த்தார்.

இறுதி கட்டத்தில் ரிஷப் பந்த் 37 ரன்களை சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில், அதிகபட்சமாக டூப்லெசி 43 ரன்களையும், கேதர் ஜாதவ் 26 ரன்களையும் சேர்த்தனர்.

சென்னை அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments