பாடும் நிலாவின் பயணங்கள் முடிவதில்லை..!

0 1232
பாடும் நிலாவின் பயணங்கள் முடிவதில்லை..!

எஸ்.பி.பி பாடிய காதல் பாடல்கள் தான், இரவு நேரங்களில் வாகனங்களை தொலைதூரம் ஓட்டிச்செல்லும் ஓட்டுனர்களுக்கும் பயணிகளுக்கும் உறங்க விடாமல் வழிகாட்டும் உற்சாகபானமாக இருக்கின்றது.

கார்களிலோ, கனரக வாகனங்களிலோ, இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுனர்களுக்கு திரை இசை பாடல்கள் தான் உறக்கத்தை விரட்டி உற்சாகமூட்டும் மருந்து. அந்தவகையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய காதல் பாடல்கள் எப்போதும் திரை இசை ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்யும்..

சின்னகவுண்டர் படத்தில் எஸ்.பி.பி பாடிய முத்துமணிமாலை என்ற பாடல் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் மெலடி.

நடிகர் கார்த்திக்கிற்கு இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பல பாடல்கள் அவரது படத்தை வெற்றிப்பட பட்டியலில் சேர்த்தது.

ராசாமகனுக்காக எஸ்.பி.பி பாடிய அத்தனை காதல் மெலடிகளும் இன்றளவும் பலகிராமங்களில் இரவு நேரம் ஒலிப்பதை கேட்க முடியும்.

எஸ்.பி.பியின் கிச்சிலி சம்பா பாடலை கேட்காத இசை ரசிகர்கள் இருக்கமுடியுமா ?

மல்லிகை மொட்டை பொத்திவச்ச வைர வரிகளுக்கு தனது குரல்வளத்தால் உயிர் கொடுத்தவர் எஸ்.பி.பி.

நடிகர் திலகத்திற்கு குரல் கொடுத்த எஸ்.பி.பி இளையதிலகம் பிரபுவுக்கும் காதல் பாடல்களை பாடியுள்ளார்.

இளையராஜாவுக்கு இணையாக இசையமைப்பாளர் தேவா இசையில் அதிகமான காதல் மெலடிகளை அள்ளித்தெளித்தவர் எஸ்.பி.பி.

டி.ராஜேந்தரின் இசையில் எஸ்.பி.பி பாடிய பல பாடல்கள் என்றும் காதலர்களின் எண்ண ஓட்டத்தை உணர்வுகளோடு விவரிப்பதாக உள்ளது.

முகவரியில்லா நடிகர்களுக்கு கூட தனது வசீகர குரலால் கிறங்கடிங்கும் காதல் பாடல்களை பாடி அசத்தியவர் எஸ்.பி.பி.

பேருந்து பயணத்தின் போது எருக்கஞ்செடி குறித்து தெரியாதவர்களை கூட இந்த காதல் பாடல் மெய்மறந்து ரசிக்கவைத்தற்கு எஸ்.பி.பி -சித்ராவின் ஜோடிக்குரல் மட்டுமே காரணம்.

கேட்பதற்கு இதமான பாடல்களை தந்த இந்த இசைக்குயில் எப்போதும் ரசிகர்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்..! ஏனெனில் பாடும் நிலாவின் பாடல்களால் பயணங்கள் முடிவதில்லை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments