இந்திய அரசுக்கு எதிரான வரித் தகராறு வழக்கில் வோடபோனுக்கு வெற்றி

0 1615
இந்திய அரசுக்கு எதிரான வரித் தகராறு வழக்கில் வோடபோனுக்கு வெற்றி

இந்திய அரசுக்கு எதிராக இருபதாயிரம் கோடி ரூபாய் வரித் தகராறு வழக்கில் வோடபோன் நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது.

வோடபோன் நிறுவனம் 2007ஆம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. அதற்கான வரி, வட்டி, அபராதம் என்கிற வகைகளில் 20 ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என இந்திய அரசு தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கில் வோடபோனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும், விதிகளைத் திருத்திய அரசு, வோடபோன் நிறுவனத்திடம் தொகையைச் செலுத்தும்படி கோரியது.

இந்நிலையில் வோடபோன் நெதர்லாந்தில் உள்ள பன்னாட்டு நடுவர் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. அந்த வழக்கில் வோடபோனுக்கு அபராதம் விதிப்பது இந்தியா - நெதர்லாந்து இடையே செய்துள்ள முதலீட்டு உடன்படிக்கையை மீறும் செயல் எனத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் வோடபோன் செலுத்த வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்துள்ளதுடன், வழக்குச் செலவுக்கு இந்திய அரசு வோடபோனுக்கு 40 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments