இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பேச்சுக்கு அனுஷ்கா சர்மா கண்டனம்

0 3080
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பேச்சுக்கு அனுஷ்கா சர்மா கண்டனம்

ஐபிஎல் வர்ணனையின்போது தன் பெயரை இழுக்க வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கருக்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி, 1 ரன்னில் ஆட்டமிழந்ததுடன் 2 முக்கிய கேட்சுகளையும் தவறவிட்டார். அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர், கோலியின் மோசமான ஆட்டத்திற்கு அவரது மனைவி அனுஷ்காவே காரணம் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அனுஷ்கா, கவாஸ்கரின் பேச்சு அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக விமர்சித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments