காதலி கர்ப்பம்... பறக்க முயன்ற ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியர்! - காதலியின் அதிரடியால் மன மாற்றம்

0 97810
போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி


கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்து தலைமறைவான ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியர் போலீஸார் தலையீட்டுக்கு பிறகு திருணமம் செய்ய ஒப்புக் கொண்டார்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த நர்மதாவும் அதே ஊரைச் சேர்ந்த பூவரசன் என்ற ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி நர்மதாவுடன் பூவரசன் உல்லாசமாக இருந்துள்ளார் . இதனால் நர்மதா தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். 'கர்ப்பத்தை இனிமேலும் மூடி மறைக்க முடியாது என்பதால் உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்' என்று பூவரசனை நர்மதா வற்புறுத்தியுள்ளார். இதற்கு பூவரசன் மறுக்கவே, கோபமடைந்த நர்மதா கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,image

இந்த சூழலில் பூவரசன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்வது போல சென்று அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதனால், மனமுடைந்த நர்மதா சில தினங்களுக்கு முன்னர் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் நர்மதா உயிர் பிழைத்து கொண்டார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலைய போலீசார் நர்மதாவிடம் சென்று வாக்கு மூலம் பெற்றனர். தொடர்ந்து, பூவரசனின் பெற்றோரை அழைத்து, ' உங்களது மகன் பூவரசனை அழைத்து வந்து எங்களிடம் ஒப்படையுங்கள்' என்றும் உத்தரவிட்டனர்.

விவகாரம விபரீதமானதை உணர்ந்த பூவரசன் நேற்று கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வந்து சரண் அடைந்தார். மேலும், நர்மதாவை தான் கல்யாணம் செய்து கொள்ளவும் ஒப்புக் கொண்டார். பூவரசன் சரணடைந்த தகவலை அறிந்த நர்மதா கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்திற்கு மணக்கோலத்தில் வந்தார். தொடர்ந்து, பூவரசனும் நர்மதாவும் கோவிலுக்குச் சென்று தாலி கட்டி தம்பதியாக மாறினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments