திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

0 851
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சியளித்தார்.

கல்யாண உற்சவ மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தம்,  அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.

இரவு சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலிக்க உள்ளார். நேற்றைய தினம் 13 ஆயிரத்து 620 பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், 94 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாளை புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை என்பதால் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments